யுஜிசி தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் இன்று உயர் கல்வித் துறை செயலரை சந்தித்து மனு அளித்தனர்.
உயர்கல்வி அலுவலரிடம் கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் மனு!
சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் உயர்கல்வி அலுவலரிடம் மனு அளித்தனார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ், "தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கலைக் கல்லூரிகளில் சுமார் 4,100 பேர் தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிவருகின்றனார். இதில் சுமார் 2,100 பேர் யுஜிசி அடிப்படை தகுதியுடன் பணிபுரிகின்றனர்.
2010ஆம் அண்டு முதல் தற்போது வரை தரவேண்டிய நிலுவைத் தொகை 16 லட்சத்தை வழங்க வேண்டும், அடிப்படை ஊதியமாக 50,000 வழங்க வேண்டும், யுஜிசி தகுதியுடைய அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் இன சுழற்சியினை பின்பற்றி பணிவரன்முறை செய்ய வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களுக்காக தனிவாரியம் அமைத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.