சென்னை:அண்ணா நகர்ப் பகுதியில் வசித்து வருபவர், கமலக்கண்ணன். முதியவரான இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த புதன் கிழமை கமலக்கண்ணன் குடித்துவிட்டு அண்ணா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் சுய நினைவின்றி கீழே விழுந்து கிடந்தார்.
அப்போது கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களான லிக்கித், யோஜித், கிரிதிக் ஆகியோர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தனர். சுய நினைவின்றி கீழே கிடந்த கமலக்கண்ணனின் அருகே அவரது பணம் 22ஆயிரம் ரூபாய் சிதறிக்கிடந்ததைக் கண்ட சிறுவர்கள் உடனே பணத்தை மீட்டு, குடும்பத்தினர் உதவியுடன் அவரையும் மீட்டு அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.