தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் எனவும், இதுவரை 3 லட்சத்து 63 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு

By

Published : Apr 4, 2019, 10:20 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, 2019ஆம் ஆண்டின் ஆசிரியர் தகுதித்தேர்வில் உள்ள தாள் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றினை எழுதுவதற்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி ஒன்று முதல் ஐந்தாம்வகுப்பு வரை கற்பிப்பதற்கு தாள் ஒன்றுதேர்வினை எழுதுவதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் 50 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் தாளான ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு பட்டதாரி கல்வியில் 45 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

இந்த தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் நடத்தப்படும். இதற்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதைத்தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் கையொப்பத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் பயன்படுத்தக்கூடிய இமெயில், ஐடி மொபைல் நம்பர் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500ம், எஸ்.சி, எஸ்சி.ஏ, எஸ்.டி மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ரூ. 250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக உள்ள நிலையில் இதுவரை 3 லட்சத்து 65 ஆயிரத்துபேர் விண்ணப்பித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details