தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 19, 2020, 7:51 AM IST

ETV Bharat / state

பயங்கரவாதிகள் 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய, பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 11 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

என்ஐஏ
என்ஐஏ

பெங்களூரு சிக்கபனாவராவில் ஜமாத் உல் முஜாஹிதீன் ஜே.எம்.பி (ஜமாஅத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ்) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பவர்கள், வாடகை வீட்டில் பதுங்கி இருப்பதாக பெங்களூரு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதுங்கியிருந்த நஜீர் சேக் (25), ஆரிப் ஹுசைன் (24), ஆசிப் இக்பால் (23) உட்பட 11 நபர்களை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜே.எம்.பி உறுப்பினர்கள் என்று தெரியவந்தது.

அந்த வீட்டில் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள், வெடி மருந்துகள், ரசாயன இயந்திரங்கள், கருவிகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்கள் இந்தியாவை தகர்க்க சதித் திட்டம் தீட்டி வருவதும் தெரிய வந்தது.

இவர்கள் மீது பயங்கரவாதியுடன் தொடர்பு, சதித் திட்டம் தீட்டுதல், வெடி மருந்துகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் பெங்களூரு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கைது செய்த 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும் தப்பியோடிய பயங்கரவாதி ஆரிப் என்பவரைக் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் பார்க்க: தமிழ்நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவத் திட்டம்: கண்காணிப்புகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details