கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தமிழ்நாடு அரசு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.
கரோனா நிவாரணப் பணிகளில் ஆசிரியர்கள் நியமனம்!
09:50 April 03
சென்னை: கரோனா நிவாரணப் பணிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் தற்பொழுது சமூக இடைவெளியைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுவருகின்றன. பொதுமக்கள் தங்களுக்கு உரிய நிவாரண பொருட்களை பெறுவதில் மிகவும் ஆர்வமாக ஒருவர் பின் ஒருவர் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் செல்லும் நிலை சில இடங்களில் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் ஒரு ஊழியர் மட்டுமே பணியில் இருப்பார். அவரால் அனைவருக்கும் விரைவாக பொருட்களை வழங்குவது சிரமமாக இருக்கிறது. இதனையடுத்து இதனைக் குறைக்க, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் பணியில், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உத்தரவிட்டுள்ளார். சமூக தனிமைப்படுத்தும் பணிக்கு நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றிட அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் சாரண, சாரணியர் இயக்கம், தேசிய மாணவர் படை, தேசிய இளைஞர் படை ஆகியவற்றில் ஒருங்கிணைப்பாளராக உள்ளவர்கள் இந்த பணியில் ஈடுபட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க..."ஏப்ரல் 5 இல் 9 நிமிடங்கள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுங்கள்" பிரதமர் மோடி வேண்டுகோள்