தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 5, 2022, 1:35 PM IST

ETV Bharat / state

தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழ்நாடு மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் நாளை (பிப்.6) தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

பிப்.7 மற்றும் 8ஆம் தேதிகளை பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இதையும் படிங்க:இந்தியாவில் கரோனா நிலவரம்; 1,27,952 புதிய தொற்றுகள்!

ABOUT THE AUTHOR

...view details