தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 29, 2020, 6:21 PM IST

Updated : Jul 30, 2020, 12:53 AM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 6,426 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் இன்று 6,426 பேருக்கு கரோனா தொற்று
தமிழ்நாட்டில் இன்று 6,426 பேருக்கு கரோனா தொற்று

18:02 July 29

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 426 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 114ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 29) புதிதாக 6 ஆயிரத்து 426 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 114ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 117 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 97 ஆயிரத்து 575ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் இன்று மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 741ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 927 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த வீடு திரும்பிய நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 883ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 57 ஆயிரத்து 490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:

சென்னை - 97,575 பேர் 

செங்கல்பட்டு - 13,841 பேர் 

திருவள்ளூர் - 13,184 பேர் 

மதுரை - 10,618 பேர் 

காஞ்சிபுரம் - 8,422 பேர் 

விருதுநகர் - 7,256 பேர் 

தூத்துக்குடி - 6,591 பேர் 

திருவண்ணாமலை - 5,823 பேர் 

வேலூர் - 5,492 பேர் 

திருநெல்வேலி - 4,729 பேர் 

தேனி - 4,468 பேர் 

ராணிப்பேட்டை - 4,491 பேர் 

கன்னியாகுமரி - 4,275 பேர் 

கோயம்புத்தூர் - 4,344 பேர் 

திருச்சிராப்பள்ளி - 3,889 பேர் 

கள்ளக்குறிச்சி - 3,633 பேர் 

விழுப்புரம் - 3,499 பேர் 

சேலம் - 3,428 பேர் 

ராமநாதபுரம் - 3,169 பேர் 

கடலூர் - 2,788 பேர் 

திண்டுக்கல் - 2,622 பேர் 

தஞ்சாவூர் - 2,554 பேர் 

சிவகங்கை - 2,226 பேர் 

தென்காசி - 1,911 பேர் 

புதுக்கோட்டை - 1,926 பேர் 

திருவாரூர் - 1,661 பேர் 

திருப்பத்தூர் - 1,052 பேர் 

அரியலூர் - 897 பேர் 

கிருஷ்ணகிரி - 924 பேர் 

திருப்பூர் - 795 பேர் 

தருமபுரி - 750 பேர் 

நீலகிரி - 735 பேர் 

ஈரோடு - 680 பேர் 

நாகப்பட்டினம் - 657 பேர் 

நாமக்கல் - 604 பேர் 

கரூர் - 431 பேர் 

பெரம்பலூர் - 395 பேர் 

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்: 

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 805 பேர் 

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 549 பேர் 

ரயில் மூலம் வந்தவர்கள் - 425 பேர்

இதையும் படிங்க:தினம் 63 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை - முதலமைச்சர் தகவல்
 

Last Updated : Jul 30, 2020, 12:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details