டிஏபி உரம் 50 கிலோ 1900 ரூபாய்க்கும், 900 ரூபாய்க்கு விற்ற காம்ப்ளக்ஸ் உரங்கள் 20:20 ரூ 1350க்கும், 1175 ரூபாய்க்கு விற்ற 10:26:26 உரம் 1775 ரூபாய்க்கும், 900 ரூபாய்க்கு விற்ற 15:15:15 உரம் ரூ 1500க்கும், 1200 ரூபாய்க்கு விற்ற 12:32:16 உரம் ரூ 1800க்கும் தற்போது விற்பனையாகின்றன. உரங்களின் விலை இப்படி கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் சோர்வு அடைந்துள்ளனர்.
உர விலை உயர்வு; மோடி அரசு கடும் விளைவுகளை சந்திக்கும்: தமிழ்நாடு காங்கிரஸ்
சென்னை: உரங்களின் வில்லையை உடனடியாக குறைக்கவில்லையென்றால் மோடி அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிற பிரதமர் மோடி அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கடும் கண்டனம். உடனடியாக உரங்களின் விலையை குறைக்க வேண்டும் இல்லையென்றால் மோடி அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த ட்வீட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.