மாமல்லபுரத்தில் வருகின்ற 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே ஒப்பந்த உடன்படிக்கை கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. அதனையொட்டி முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில், வெண்ணெய் உருண்டைகள் உள்ளிட்டவற்றை பார்வையிடவுள்ளனர். அதனால் அப்பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மாமல்லபுரத்தில் ஆய்வு!
காஞ்சிபுரம்: இந்திய பிரதமர், சீன அதிபர் வருவகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிடாமி ஆய்வு மேற்கொண்டார்.
mahabalipuram
அதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: பிரதமர் வருகையால் புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம்!