தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2020, 10:46 AM IST

Updated : Mar 18, 2020, 11:16 AM IST

ETV Bharat / state

தொடங்கியது சட்டப்பேரவை: முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட வாய்ப்பு

சென்னை: சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

assemply
assemply

காலை 10 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. பேரவை தொடங்கியதும் கேள்விகள் கேட்கப்பட்டு விவாதம் நடைபெற்றுவருகிறது.

இதில் உறுப்பினர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், சி. விஜய பாஸ்கர், பெஞ்சமின், நிலோபர் கபீல் ஆகியோர் பதிலளித்துப் பேசுகின்றனர்.

தொடர்ந்து நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கியப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்புவார்கள். அப்போது, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.

திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசுவார்கள். அதனைத்தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

முதலமைச்சர் 110 விதியின்கீழ் கோவிட்-19 தொற்று குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கர்ப்பிணிக்கு மாற்று மருந்து தடவிய செவிலியர் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Last Updated : Mar 18, 2020, 11:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details