தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டுமன்னார்கோவில் அரசு கல்லூரி மாற்று இடத்தில் கட்ட கூடுதல் நிதி தேவை: சிந்தனை செல்வன்

காட்டுமன்னார்கோவிலில் அரசு கலைக் கல்லூரி மாற்று இடத்தில் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடம் நீர்நிலைப் பகுதி என்பதால் அதை உறுதிப்படுத்த கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சிந்தனை செல்வன் கேட்டுக் கொண்டார்.

சிந்தனை செல்வன்
சிந்தனை செல்வன்

By

Published : Apr 27, 2022, 2:19 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 27) கேள்வி நேரத்தில் பேசிய காட்டுமன்னார்கோவில் தொகுதி உறுப்பினர் சிந்தனை செல்வன், "காட்டுமன்னார்கோவிலில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்திருக்கும் இடத்திலேயே தற்போது இயங்கி வருகிறது. எனவே கல்லூரியை வேறு இடத்தில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்காக 9 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது.

ஆனால் கல்லூரி கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் நீர்நிலைப் பகுதி என்பதால் மண் கொண்டு நிரப்பி நிலத்தை உறுதிபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பதால் கூடுதலாக 5 கோடி ரூபாய் செலவாகும் என பொறியாளர்கள் கூறுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

எனவே இந்த கல்லூரியை கட்டுவதற்கு கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உயர்கல்வித்துறை அமைச்சர் ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற சூழ்நிலையில் உள்ள கல்லூரிகளுக்கு பணிகளை மேற்கொள்ள கூடுதலாக நிதி ஒதுக்கும்படி நிதித்துறைக்கும், முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் கல்லூரி கட்ட, உறுப்பினர் வைத்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் " என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை காமராசர் பல்கலைக்கழகமா..? அல்லது கார்ப்பரேட் நிறுவனமா..? - பல்கலைக்கழக பாதுகாப்பு குழு கேள்வி

ABOUT THE AUTHOR

...view details