சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பூந்தமல்லி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி, பூந்தமல்லி தொகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “பூந்தமல்லி தொகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க சாத்தியக் கூறுகள் இல்லை. அந்த இடத்திற்கு மாற்றாக வேறு இடத்தை அரசு தேடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை தான் இந்திய அளவில் கால்நடை பராமரிப்புத் துறையில் முதலிடம் வகிக்கிறது.
இந்த ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 46 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், வெள்ளை ஆடுகள் வழங்கியுள்ளோம். அதற்காக 1,650 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம். முன்பு 400 உறுப்பினர்கள் இருந்தால் அதில் 250 நபர்களுக்கு முதல் கட்டமாகவும், அடுத்த கட்டத்தில் மற்ற 150 நபர்களுக்கும் வழங்கி வந்தோம். தற்போது 450 நபர்கள் இருந்தால் 450 நபர்களுக்கும் வழங்கி வருகிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க :கரோனாவால் முடங்கிய தொழில்: மாற்று இழப்பீடு கோரும் வியாபாரிகள்