சென்னை:2022-23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அடுத்த மாதம் தாக்கல்செய்யப்பட உள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முழுமையாகத் தாக்கல்செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் அதைத் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன.
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாகக் கலந்தாய்வுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழிற்சாலை மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சங்கப் பிரதிநிதிகளுடனும், வர்த்தகச் சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த நிறுவன பிரதிநிதிகளுடன் நிதிநிலை அறிக்கையில் அவர்களது எதிர்பார்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வகையிலும் உற்பத்தியை அதிகரிக்கக் கூடிய வகையிலும் என்ன வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார். முன்னதாக, மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "மதுரைக்கு நிதி ஒதுக்கீடுசெய்வதில் எந்தக் குறையும் இல்லாமல் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பட்ஜெட் வெளியாக இருக்கும் அறிவிப்புகள் என்ன தமிழ்நாடு மக்களுக்கும் வரும் நிதிநிலை அறிக்கையில் எட்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்குப் பல்வேறு எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க உள்ளேன். அன்னை மீனாட்சி அருளால் எனக்கு இந்தப் பொறுப்புக் கிடைத்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'கச்சத்தீவு உடன்படிக்கைக்குப் பின்புதான் இந்தியா, இலங்கை மீனவர்கள் நட்பில் பாதிப்பு!'