சென்னை:சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் 1000 படுக்கைகளுடன் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையின் பணிகள் முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுப்பதற்கு நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்ல பயணிக்க தயாரானார்.