தமிழ்நாடு

tamil nadu

ஆதரவற்றோர்களை மீட்டு மறு வாழ்வு கொடுக்கும் தாம்பரம் காவல்துறை

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்த ஆதரவற்ற 8 பேரை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பிய தாம்பரம் காவல் ஆணையாளர் சீனிவாசனை பலரும் பாராட்டிவருகின்றனர்.

By

Published : Aug 9, 2021, 7:38 PM IST

Published : Aug 9, 2021, 7:38 PM IST

tambaram-police-resuscitate-the-helpless
ஆதரவற்றோர்களை மீட்டு மறு வாழ்வு கொடுக்கும் தாம்பரம் காவல்துறை

சென்னை:தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறவினர்களால் கைவிடப்பட்டோர் பல இன்னல்களுக்கு நடுவே வாழ்ந்து வருகின்றனர்.

தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, சமூக ஆர்வலர்கள், அவர்களுக்கு மூன்று வேலையும் உணவளித்து வந்தனர். தற்போது தளர்களுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்கள் உணவின்றி தவித்து வந்தனர்.

ஆதரவற்றோர்களை மீட்டு மறு வாழ்வு கொடுக்கும் தாம்பரம் காவல்துறை

இதையறிந்த தாம்பரம் உதவி காவல் ஆணையாளர் சீனிவாசன், சாலையோரம் உணவின்றி தவித்து 8 ஆதரவற்றோரை மீட்டு தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களுக்கு உணவளித்து, புத்தாடை கொடுத்து அவர்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தார்.

விரைவில் தாம்பரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றோர் அனைவரையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப் போவதாக ஆணையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சொந்த செலவில் ஆக்சிஜன் வசதியுடன் அவசர ஊர்தி - அரசு பேருந்து ஓட்டுநரின் மனிதநேயம்

ABOUT THE AUTHOR

...view details