தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 17, 2022, 9:56 PM IST

ETV Bharat / state

ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் லுக்கில் சூர்யா; பிறந்தநாள் காமன் டிபி வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா வரும் ஜூலை 23ஆம் தேதி தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூர்யாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக கேங்ஸ்டர் லுக்கில் காமன் புகைப்படம் வெளியிட்டுள்ளனர், அவரது ரசிகர்கள்.

ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் லுக்கில் சூர்யா பிறந்தநாள்: காமன் டிபி வெளியீடு!
ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் லுக்கில் சூர்யா பிறந்தநாள்: காமன் டிபி வெளியீடு!

சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனுமான சூர்யா ஏராளமான படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்க நடிகராக இருக்கிறார்.

இவரது சமீபத்திய படங்களான சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகியப் படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக போற்றப்படுபவை.மேலும் 'சூரரைப்போற்று' திரைப்படம் ஆஸ்கர் வரை சென்று தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்தது.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான 'விக்ரம்' படத்தில் ரோலக்ஸ் என்ற நெகடிவ் கேரக்டரில் நடித்து சூர்யா அசத்தியிருந்தார். இந்நிலையில் இவர் வரும் ஜூலை 23ஆம் தேதி தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதனைச் சிறப்பிக்கும் விதமாக, அவரது ரசிகர்கள் சார்பில் கேங்ஸ்டர் லுக்கில் பொதுவான COMMON DP ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:’தவறான சில விமர்சனங்கள் மனதிற்கு கஷ்டமாக உள்ளது..!’ - பார்த்திபன்

ABOUT THE AUTHOR

...view details