தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாணவி ஃபாத்திமா லத்தீப் உயிரிழந்த விவகாரம்' - தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் ஆய்வு!

சென்னை: ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை ஐஐடியில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பாக ஆய்வு நடத்தினர்.

inquiry IIT Madras
inquiry IIT Madras

By

Published : Dec 12, 2019, 9:25 PM IST

கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை ஐஐடியில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பாக, அதன் தலைவர் கண்ணகி பாக்கியநாதன், இணை இயக்குநர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன், ' ஐஐடியின் மனிதநேயத் துறைத் தலைவர், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேராசிரியர்களையும் சந்தித்து விசாரணை நடத்தினோம். குற்றப்பிரிவு விசாரணை முடிவுக்கு பின்பு முழுமையான விவரங்களைக் கூற முடியும்' என்று கூறினார்.

மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், ' இந்தப் பெண் தங்கியிருந்த அறையை காவல் துறையினர் மூடி சீல் வைத்துள்ளனர். அவரது லேப்டாப் உள்ளிட்ட மற்ற பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர். காவல் துறை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதன் பிறகு மகளிர் ஆணையம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

இதையும் படிங்க:

தீப விளக்கைப் பற்ற வைக்கும் போது ஏற்பட்ட விபரீதம் - பெண் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details