தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லி வன்முறை: இயல்பு நிலையை மீட்க ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: டெல்லியில் இயல்பு நிலையை மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என டெல்லி அரசிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் இயல்பு நிலையை மீட்க ஸ்டாலின் வேண்டுகோள்
டெல்லியில் இயல்பு நிலையை மீட்க ஸ்டாலின் வேண்டுகோள்

By

Published : Feb 26, 2020, 7:17 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக, டெல்லியிலுள்ள ஷாகீன் பாக் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுவந்தது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், துப்பாக்கிச் சூடு சம்பவமும் அங்கு நடைபெற்றது.

இந்நிலையில், திங்கள் கிழமை மாலை ஷாகீன் பாக் பகுதியில் திடீரென்று வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 191 பேர் காயமுற்றுள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன் ட்விட்டர் பக்கத்தில், “டெல்லியில் குடிமக்கள், ஊடகவியலார்கள் மீது நடைபெற்ற கொடூரமான தாக்குதலால் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. டெல்லி யூனியன் அரசு காவலர்களை கட்டுப்படுத்துவது போல, வன்முறையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து இயல்பு நிலையை மீட்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் வன்முறைக்கு இடமில்லை - காங்கிரஸ்

ABOUT THE AUTHOR

...view details