தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CII CONNECT 2021: 'தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க கவனம் செலுத்துக'

அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என சிஐஐ கனெக்ட் 2021 (CII CONNECT 2021) மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CII CONNECT 2021
CII CONNECT 2021

By

Published : Nov 20, 2021, 10:33 AM IST

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள சிஐஐ கனெக்ட் 2021 (CII CONNECT 2021) மாநாடு குறித்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “இந்தியத் தொழில் முதலீட்டின் முதல் முகவரியாக தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக அரசு செயல்பட்டுவருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்! அதற்கு ஒத்துழைத்து வரும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னணி மாநிலமாக மாறும் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசும் - இந்தியத் தொழில் கூட்டமைப்பும் இணைந்து 2000ஆம் ஆண்டுமுதல் ‘கனெக்ட்’ என்ற மாநாட்டை நடத்திவருகிறது. இதனுடன் இணைந்து பொருள்காட்சியையும் ஒருங்கிணைத்துவருகிறது. இதன் மூலமாக தகவல்தொடர்பு தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக மாறிவருகிறது.

டெக் கோரிடர்ஸ் (Tech Corridors) எனப்படும் தொழில்நுட்ப மண்டலங்களை அமைத்தது இதன் மிக முக்கியமான சாதனை ஆகும். ஐசிடி அகாதமி (ICT Academy) எனப்படும் தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், விண்வெளி தொழில் பூங்கா ஆகியவையும் உருவாக்கப்பட்டு திறம்படச் செயல்பட்டுவருகின்றன. இதற்குக் காரணமான அனைவரையும் பாராட்டுகிறேன்.

இதன் தொடர்ச்சியாக இந்த கனெக்ட் கருத்தரங்கை ஏற்பாடுசெய்துள்ளீர்கள். இதன் மூலமாகத் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் புதிய முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய அளவில் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஊக்குவிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள்வைக்கிறேன். 2030ஆம் ஆண்டுக்குள் நமது தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் அளவில் பொருளாதார உற்பத்தியை அடைய வேண்டும் என்று நான் சொல்லியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு இந்த மாநாடும் உதவி செய்வதாக அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு நிரந்தரமான, முழுமையான தொழில்நுட்பச் சூழலை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அனைவரும் வழங்க வேண்டும். அதனைச் செயல்படுத்தித் தருவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. உலகம் முழுவதுமிருந்தும் வந்து கலந்துகொண்டுள்ள ஆளுமைகள் அனைவரையும் வரவேற்கிறேன். கனெக்ட் - 2021 (CONNECT-2021) தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு வெற்றிபெற நெஞ்சார வாழ்த்துகிறேன்!” என்றார்.

இதையும் படிங்க: Property Accumulation Case: கே.பி. அன்பழகன் மீது சொத்துக்குவிப்பு புகார்

ABOUT THE AUTHOR

...view details