சென்னை:சட்டப்பேரவையில்பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பெண்கல்வியை ஊக்குவிக்கவே தாலிக்குத்தங்கம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. எனவே, மீண்டும் அதை செயல்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது எனப் பேசி, கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு திட்டங்களை முடக்கப்பெயர் போன அரசு முந்தைய அதிமுக அரசு. ஓமந்தூரார் தோட்டத்தில் சட்டப்பேரவை திறக்கப்பட்டது.
1. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதை மருத்துவமனையாக மாற்றியது யார்?
2. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பாழடிக்க முயற்சித்தது யார்?
3. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள கலைஞர் பெயரை நீக்கியது யார்?