தமிழ்நாடு

tamil nadu

'ஒவ்வொரு மாணவனும் ஒரு விஞ்ஞானி திட்டம்' - சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

By

Published : Nov 25, 2019, 2:41 PM IST

சென்னை: சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சியில் ஊக்குவிக்கும் வகையிலான நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு மாணவனும் ஒரு விஞ்ஞானி

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் , சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 'ஒவ்வொரு மாணவனும் ஒரு விஞ்ஞானி' என்கின்ற திட்டத்தின் கீழ், மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை அழைத்து பருவநிலை மாற்றம் தொடர்பாக அவர்களின் கருத்துக்களைக் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, பருவநிலை மாற்றம் தொடர்பாக உரையாற்றினர்.
மேலும் பருவநிலை மாற்றம் தொடர்பான கட்டுரைகளையும், அதை எதிர்கொள்வது தொடர்பாகச் செய்திருந்த மாதிரி படத்தையும் மாணவர்கள் சமர்ப்பித்தனர்.

இதை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பார்வையிட்டார். மேலும், ஃபோல்ட் ஸ்கோப்-ஐ எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எவ்வாறு ஒன்று சேர்ப்பது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாணவனும் ஒரு விஞ்ஞானி

இதையும் படிங்க: கன்னியாகுமரி இளைஞர்கள் புதிய முயற்சி... வாட்ஸ் ஆப்பில் இணைந்து மாவட்டத்தைப் பசுமையாக்கும் திட்டம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details