மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் பரப்பரப்பாக நடைபெற்றுவருகிறது. இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவைத் தொகுதி மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை எட்டு மணிமுதல் தொடங்கிய வாக்குப்பதிவானது நான்கு மணி நேரம் கடந்தும் அமமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட முன்னிலை பெறவில்லை என்பதால், பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் வீடு களையிழந்தும், வெறிச்சோடியும் காணப்படுகிறது.
சிறிய கூட்டம் என்றால் கூட தொண்டர்களால் நிரம்பி வழியும், தினகரனின் வீட்டில் ஒருவர் கூட வராமல் இருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற ஆர்.கே நகர் தேர்தலில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். இதனைதொடர்ந்து அவர் செல்லும் இடம், கட்சி அலுவலகம், வீடு உள்ளிட்டவை எல்லாம் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது.
வெறிச்சோடிய டிடிவி தினகரன் இல்லம் ஆனால் தற்போது மக்கள் நீதிமய்யம் கட்சியை விட குறைவான வாக்குகளும், அநேக இடங்களில் ஒரு வாக்குகூட பெறாமல் இருப்பதற்கும் தான் இந்த நிலைக்கு காரணம் என பரபரப்பாக பேசப்படுகிறது.