தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை மாற்றுவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது - சென்னை உயர் நீதிமன்றம்!

Kanchipuram Court: செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை, காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
Madras High Court

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 8:35 PM IST

சென்னை:ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நீதிமன்றங்களும், சார்பு நீதிமன்றங்களும் செங்கல்பட்டில் அமைந்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சார்பு நீதிமன்றங்கள் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்படவில்லை எனக் கூறி, சின்ன காஞ்சியைச் சேர்ந்த எம்.எஸ்.குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், வழக்குகளுக்காகச் செங்கல்பட்டு செல்ல வேண்டியுள்ளதால், செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சார்பு நீதிமன்றங்களைக் காஞ்சிபுரத்துக்கு மாற்றக் கோரி 2023 ஆகஸ்ட் மாதம் அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களைக் காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற நிர்வாக பிரிவு பரிசீலித்து வருவதாகத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பதவி விலகக்கோரி ஜி.எஸ்.டி துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதம்!

ABOUT THE AUTHOR

...view details