குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு, சவால்கள், முன்னுரிமைகள், பங்கேற்பு என்ற தலைப்பில் இன்று மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் சார்பாக இணைய வழிக் கருத்தரங்கு, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் சி. பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சமூகப் பாதுகாப்புத் துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தொழிலாளர் நலன், மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, போக்குவரத்துத் துறை அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான மாநிலக் குழு, குழந்தைகள் நலனுக்கான இந்தியக்குழு, யுனிசெப் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கருத்தரங்கில் பேசிய மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி.பொன்னையன், "தமிழ்நாட்டின் கடைக்கோடியில் வாழும் குழந்தைகளையும் பயன்கள் சென்றடையும் வண்ணம் திட்டங்கள் வகுக்கப்பட்டு, குழந்தைகளின் உரிமைகள் மதிக்கப்பெறவும், பாதுகாக்கப்படுவதையும், மேம்பாடு அடையச் செய்வதையும் உறுதி செய்யும் வகையில் இக்கருத்தரங்கின் பரிந்துரைகள் அமைந்துள்ளன" என்று தெரிவித்தார்.