கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தமிழ்நாட்டிலும் அமலிலிருந்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கவும், தகுந்த இடைவெளியைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் ஆகியவற்றுக்காக தொற்று நோய்ச் சட்டம் மற்றும் ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் பொது இடங்களில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதைத் தவிர்க்க, 144 தடை உத்தரவைக் கடைப்பிடிக்க மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
சென்னையில் 144 உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட காவல் ஆணையர்!
சென்னை: சென்னையில் 144 தடை உத்தரவை மே 31ஆம் தேதி வரை நீட்டித்து மாநகரக் காவல் ஆணையர் ஏ கே. விஸ்வநாதன் ஆணையிட்டுள்ளார்.
chennai commissionor AK Viswanathan
உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த தடை உத்தரவு இன்றுடன் முடியவுள்ளது. ஆகவே 144 தடை உத்தரவை சென்னையில் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டித்து ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு 4.0 அரசாணை வெளியீடு!