தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இரண்டாம் கட்டத் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நிறைவு

சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகள் நேற்று (பிப்.10) நடைபெற்றன.

By

Published : Feb 11, 2022, 8:01 AM IST

சென்னையில் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நிறைவு
சென்னையில் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நிறைவு

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 24 மையங்களில், தேர்தல் பணிகள் குறித்த இரண்டாம் கட்டப்பயிற்சி வகுப்புகள் நேற்று (பிப்.10) நடைபெற்றது. இதில் 27 ஆயிரத்து 812 அரசு ஊழியர்களைப் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பயிற்சியில் பங்கேற்க உள்ள ஊழியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

பயிற்சி வகுப்பில் பங்கேற்க உள்ள அலுவலர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் கடந்த அலுவலர்களுக்கு, முன்னெச்சரிக்கை தடுப்பூசி பயிற்சி மையங்களிலேயே செலுத்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் மொத்தம் 27 அறைகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை, இயந்திரங்களில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வது உள்ளிட்டவை குறித்து காணொலி மூலம் ஊழியர்களுக்கு செய்முறை விளக்கம் வழங்கப்பட்டது. பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டார். முதற்கட்டப்பயிற்சி வகுப்பு கடந்த 31ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'தலைக்கு தில்ல பார்த்தீயா..!' - பாஜக தலைமை அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details