தமிழ்நாடு

tamil nadu

கலை, அறிவியல் கல்லூரி: கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளம் உயர்வு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணி புரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாத தொகுப்பூதியத்தை ரூ. 15 ஆயிரத்திலிருந்து, ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி உயர் கல்வித்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

By

Published : Sep 29, 2021, 11:01 PM IST

Published : Sep 29, 2021, 11:01 PM IST

கௌரவ விரிவுரையாளர்கள் சம்பளம் உயர்வு
கௌரவ விரிவுரையாளர்கள் சம்பளம் உயர்வு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து, ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில், '2020 - 2021ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 1, 661 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ. 15 ஆயிரம் வீதம், 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.

இதே போன்று 2021 - 2022ஆம் கல்வி ஆண்டிலும், 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 சுழற்சி முறையில் பாடப்பிரிவுகளை நடத்த ஏதுவாக 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் வீதம், 11 மாதங்களுக்கு தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி வழங்கப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு: ஆளுநர் சொல்வது என்ன?

ABOUT THE AUTHOR

...view details