சென்னை:தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்த பிரபாகர் மத்திய அரசின் யுஐடிஏஐ (UIDAI) துறையின் பொது துணை இயக்குனராக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி, வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்ட பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிவந்த பிரபாகர் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.