தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏ.டி.எம்., பணம் செலுத்தும் எந்திரம் மூலம் ரூ. 48 லட்சம் மோசடி - சென்னை காவல் ஆணையர்!

எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மைய பணம் செலுத்தும் எந்திரம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 48 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

பணம் செலுத்தும் எந்திரம் மூலம் மோசடி
பணம் செலுத்தும் எந்திரம் மூலம் மோசடி

By

Published : Jun 22, 2021, 5:17 PM IST

சென்னை:தலைநகரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையங்களில் தொடர் நூதன கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பணம் செலுத்தும் எந்திரங்கள் உள்ள ஏடிஎம் மையங்களில் இந்த கொள்ளை நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த நூதன மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில், எஸ்பிஐ வங்கியின் சென்னை மண்டல முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று(ஜூன் 22) சந்தித்தார்.

காவல் ஆணையர் பேட்டி

சென்னையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறிவைத்து நடக்கும் நூதன மோசடி குறித்து ஆணையருடன் ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "சென்னையில் மட்டும் இதுவரை நூதன கொள்ளைக் குறித்து 7 புகார்கள் வந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் 19 கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறன என்றார்.

பணம் செலுத்தும் எந்திரங்களில் மோசடி

தொடர்ந்து, "பணம் செலுத்தும் எந்திரங்களில் மட்டும் நூதன முறையில் இந்த மோசடி நடந்துள்ளது. இந்த நூதன பாணியில் இதற்கு முன்பு மோசடி நடந்ததில்லை. சென்னையில், 17,18ஆம் தேதிகளில் மட்டும் தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. பின்னர் மற்ற மாவட்டங்களில் நடந்திருக்கின்றன. இந்த நூதன முறையில், தமிழ்நாடு முழுவதும் ரூ. 48 லட்சம் கொள்ளையடிக்கப்படிருக்கிறது. இவை வங்கி பணமே தவிர, வாடிக்கையாளர்கள் பணம் இல்லை" என்றார்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மோசடி கும்பல் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்திருப்பதாகவும், சிசிடிவி காட்சிகளை வைத்து மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த சங்கர் ஜிவால் இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவிற்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஏடிஎம் சேவை நிறுத்தம்

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பிஐயின் தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், " எஸ்பிஐ வங்கி இரண்டு வகையான பணம் செலுத்தும் எந்திரங்களை பயன்படுத்துகிறது. அவைகளில் ஒரே நிறுவனத்தின் தயாரிப்பான எந்திரத்தில் மட்டும் இந்த மோசடி நடந்து வருகிறது. அதனால், அந்த குறிப்பிட்ட வகை எந்திரங்கள் பயன்படுத்தப்படும் ஏடிஎம் மையங்களில், பணத்தை எடுக்கும் சேவை வாடிக்கையாளர்களுக்கு தடை செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பண மோசடியில் தலைமறைவான நபர் விமான நிலையத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details