சென்னை: ஆவடி காவல் ஆணையராக எல்லைக்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் அம்பத்தூர் காவல் சரக கொரட்டூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி பெரம்பூர் பகுதியில் 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 7 பேரை கொரட்டூர் காவல் நிறைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான உதவி ஆய்வாளர் பச்சைமுத்து உட்பட 12 பேர் கொண்ட காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து 5 ஆசிட் பாட்டில், 12 கத்தி, 5 பைக் ,7 செல்போன், 2 கிலோ கஞ்சா, 1 எடை போடும் இயந்திரம், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலூம் கொரட்டூர் காவல் நிலையத்தில் பாதுகாப்புடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறை விசாரனையில் குற்றவாளிகளின் நேக்கம் தெரியவந்துள்ளது:ஆவடி காமராஜர் நகரை சேர்ந்து பிரகாஷ் 27, ரேட்டை ஏரி லட்சுமிபுரம் கல்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் 26, புத்தகரத்தை சேர்ந்த ஜெயக்குமார் 20, வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் 29, அதே பகுதியைச் சேர்ந்த ஐசக் ராபர்ட் 19, பெரம்பூரை சேர்ந்த ஈசாக் 22 , திருமுல்லைவாயலை சேர்ந்த கிருஷ்ணகுமார் 19, ஆகியோரை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் எண் 10தில் என்கிற வீட்டில் பயங்கர கத்தி உள்ளிட்ட பல ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி டி3 கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் கே. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்று குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துள்ளனர்.