தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 29, 2020, 10:55 PM IST

ETV Bharat / state

இறந்தவருக்கு கரோனா: இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சம்!

சென்னை: இறந்த மீன் வியாபாரி உடல் அடக்கம் செய்த பின்னர் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று பரவி இருக்குமோ என அச்சம் உருவாகியுள்ளது.

corona
corona

சென்னை சேலையூர் அடுத்த பாரத் நகரைச் சேர்ந்தவர் குமார் (45). மீன் வியாபாரியான இவர் நெஞ்சு வலி கரணமாக நேற்று முன்தினம் (செப். 27) வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குமார் நேற்று (செப். 28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கரோனா தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் முடிவுகள் வருவதற்கு முன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் இறந்தவரின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு உடலை சேலையூர் இடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக மருத்துவமனையில் இருந்து தாம்பரம் நகராட்சிக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் நகராட்சி அலுவலர்கள் இறந்தவரின் வீட்டிற்குச் சென்றபோது அங்கு யாரும் இல்லாததால் எச்சரிக்கை அறிவிப்புப் பலகையைப் பொருத்தினர். மேலும் அப்பகுதியில் கரோனா பரிசோதனை நடத்த நகராட்சி மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

கரோனா பரிசோதனைக்கு வந்த அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் கால தாமதமாக கரோனா பரிசோதனை முடிவு வழங்கியது ஏன்? முடிவு வருவதற்கு முன் உடலை ஏன் கொடுத்தீர்கள்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details