தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு விதிமுறைகளை மீறும் தனியார் வங்கிகளால் கரோனா பரவும் அபாயம்!

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கிகளில், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் கூடுவதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

risk-of-corona-spreading-by-private-banks-violating-government-regulations
risk-of-corona-spreading-by-private-banks-violating-government-regulations

By

Published : Sep 2, 2020, 8:44 PM IST

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வங்கிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. மாதத்தொடக்கம் என்பதால் பணம் எடுப்பது, பணத்தை வங்கியில் சேமிப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக வங்கியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

அது மட்டுமல்லாமல் முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு காரணங்களுக்காக வங்கிகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதற்காக வங்கிகள் மற்றும் காவல் துறை சார்பாக, காவலர்களை நிறுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பழைய வண்ணாரப்பேட்டையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு தனியார் வங்கிகளில், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதில் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது, கரோனாவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு இணையானது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வங்கிகளில் முழுமையான ஆட்கள் இல்லாததால், பண பரிவர்த்தனை மெதுவாக நடைபெறுவதாகவும், பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் கணினிகளில் நெட்வொர்க் குளறுபடிகளும் கூட்ட நெரிசலை ஏற்படுத்துகிறது. இதை வங்கிகளின் சார்பில் நிர்வாகம் சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் வங்கிகளில் தினமும் காலையில் நூறு டோக்கன்கள் மட்டும் விநியோகிக்கப்பட்டு, டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டும் வரிசையில் அனுமதித்து வருகின்றனர். மற்றவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலையும் ஏற்படுகின்றது. இதற்கான தகுந்த நடைமுறைகளை காவல்துறையும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்...! இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details