தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியா்கள் மீட்பு

சென்னை: சூடான்,கிர்கிஸ்தான், ஒமன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த இந்தியா்கள் மருத்துவ கல்லூரி மாணவா்கள் உள்பட 559 போ் மீட்கப்பட்டு நான்கு சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

வெளி நாடுகளில் சி்க்கித்தவித்த இந்தியா்கள்
வெளி நாடுகளில் சி்க்கித்தவித்த இந்தியா்கள்

By

Published : Jul 3, 2020, 11:37 AM IST

ரஷ்யா அருகே உள்ள கிர்கிஸ்தான் நாட்டிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் 167 இந்தியர்களுடன் சென்னை வந்தது. அவா்களில் 100க்கும் மேற்பட்டவா்கள் மருத்துவக் கல்லூரி மாணவா்கள். 167 பேரில் ஆண்கள் 106, பெண்கள் 61 ஆவார்கள்.

இவா்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்ததும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் 61 போ் இலவச தங்குமிடங்களான சவீதா கல்வி நிறுவனத்திற்கும், 106 போ் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர்.

இதேபோல் சூடானிலிருந்து 37 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்களும், ஓமனிலிருந்து 142 ஆண்கள், 30 பெண்கள், 8 சிறுவர்களும், குவைத்திலிருந்து தனியாா் சிறப்பு மீட்பு விமானம் மூலமாக இன்று அதிகாலை 169 இந்தியர்களும் சென்னை வந்தடைந்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4000 பேருக்கு மேல் கரோனா' - அமைச்சர் விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details