தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 16, 2022, 10:44 PM IST

ETV Bharat / state

வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை

தேர்தல் பணி ஒதுக்கீடு இல்லாத, தேர்தல் நடைபெறாத பிற பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தேர்தல் நாளன்று அவர்களுக்கும் விடுமுறை அளிக்கத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.

வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் நடைபெறாத பிற பகுதியில் ஆசிரியர்கள் விடுமுறை அளிக்க கோரிக்கை
வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் நடைபெறாத பிற பகுதியில் ஆசிரியர்கள் விடுமுறை அளிக்க கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 22ஆம் தேதியன்று 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதிசெய்ய வாக்களிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புதுப்புது திட்டங்களை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது.

அதன்படி தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. முன்னதாகத் தமிழ்நாடு அரசு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நாளில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொது விடுமுறை அளித்து உத்தரவிட்டது.

வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் நடைபெறாத பிற பகுதியில் ஆசிரியர்கள் விடுமுறை அளிக்க கோரிக்கை

இந்த விடுமுறை நாளில் அரசு, தனியார் நிறுவனங்களில் சம்பளம் பிடித்தம் கூடாது என்று கோரிக்கைகள் எழுந்தன. அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு (பிப்ரவரி 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது ஜனநாயகக் கடமை. இந்த விடுப்பிற்கு சம்பள பிடித்தமோ, சம்பள குறைப்போ இருக்கக் கூடாது. இதனை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு அரசு தேர்தல் நடைபெறவுள்ள நகர்ப்புறங்களில் வாக்குரிமை பெற்றுத் தேர்தல் நடைபெறாத பிற பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த அவர்களுக்கும் விடுமுறை அளிக்க அறிவிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை.

வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் நடைபெறாத பிற பகுதியில் ஆசிரியர்கள் விடுமுறை அளிக்க கோரிக்கை

ஆகையால் நகர்ப்புறங்களில் வாக்குரிமை பெற்றுத் தேர்தல் நடைபெறாத பிற பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பகுதி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அவர்களுக்கு அளிக்கும் வகையிலும், ஜனநாயகக் கடமையாற்ற ஏதுவாக தேர்தல் நடைபெறும் 19ஆம் தேதி அவர்களுக்கும் விடுமுறை அளிக்க மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநில தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: 200 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் தேரோட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details