தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் ஊழியர்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் கைது

பெண் தூய்மை பணியாளர்கள் குறித்து தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது
கைது

By

Published : Dec 21, 2021, 9:31 AM IST

சென்னை: ஆவடி மாநகராட்சியை சேர்ந்த பெண் தூய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்களை தவறாக சித்தரித்து சிலர் வாட்ஸ் அப்பில் பரப்பி வருவதாக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆவடி காவல் துறையினர் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் பெண் தூய்மை பணியாளர்களை தவறாக சித்தரித்தவர் ஆவடி மிட்டனமல்லி பகுதியை சேர்ந்த பத்திரிகை நிருபர் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பந்தப்பட்ட அலுவலர்களைக் குறிவைத்து அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் தொடர்பு இருப்பது போல தானே எடிட் செய்து தவறான செய்திகளை பல்வேறு குழுக்களில் பதிவேற்றி, பணம் வாங்குவது விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:கடிதம் எழுதிவைத்து மாணவி தற்கொலை: கல்லூரி மாணவர் கைது

ABOUT THE AUTHOR

...view details