தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெரியார் வாசகத்தை அகற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்க' - கி.வீரமணி!

சென்னை: "பெரியார் சிலைகளில் கடவுள் இல்லை என்ற வாசகத்தை அகற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

chennai HC

By

Published : Jul 15, 2019, 8:33 PM IST

தமிழ்நாட்டித்தில் உள்ள பெரியார் சிலைகளில் கடவுள் இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்ற பெரியாரின் வாசகங்களை அகற்றக்கோரி தன்மான தமிழர்கள் கூட்டமைப்பை சேர்ந்த தெய்வநாயகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி பதில் மனுத்தாக்கல் செய்தார். அதில், பெரியார் கூறிய வாசகங்களை அகற்ற, அடிப்படை ஆதாரங்கள் எதும் இல்லாமல், எந்த வித ஆவணங்களும் இல்லாமல் உள்நோக்கத்துடன் மனுதாரர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அனைத்து தன்மான தமிழர்கள் கூட்டமைப்பு என பெயர் வைத்து கொண்டு பெரியாருக்கு எதிராக அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளது. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதபோது மனிதம்தான் நிலைத்து நிற்கும் என்பதே பெரியாரை பின்பற்றுவர்களின் நோக்கம்.

1928ஆம் ஆண்டே பெரியார் கடவுள் இல்லை என்று கடவுள் மறுப்பு குறித்து பேசியுள்ளார். 1967ஆம் ஆண்டு கடவுள் இல்லை. தமிழ்நாட்டின் பல இடங்களில் தன் பேச்சில் பெரியார் வெளியிட்டுள்ளார். கடவுளை மறுக்கும் சமூகத்தில் தான் பெரியார் மீதான பற்று அதிகரித்திருக்கிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கூட இதுவரை பெரியாரின் வாசகத்தை நீக்கக்கோரி வழக்கு தொடரவில்லை. எனவே பெரியாரின் வாசகத்தை நீக்கக்கோரி மனுதாரர் தொடர்ந்த வழக்கு ஏற்புடையது அல்ல. அவரின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு மனுதாரர் சார்பாக, பதில் மனுக்கு பதிலளிக்க காலஅவகாசம் கோரியதால், வழக்கினை வரும் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details