திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவம் அளிக்கப்பட்டுவந்தது.
அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, இன்று காலை ஜெ. அன்பழகனின் உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திமுகவினர், பொதுமக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், ரேலா மருத்துவமனைஜெ. அன்பழகன் உயிர் இழப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த ஜெ. அன்பழகனுக்கு இன்று காலை கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.