சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டிஅடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவலிங்கம் (42). இவரது மனைவி வீரம்மாள், இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும்
ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த 6 ஆம் தேதி இரவு 8 மணியளவில் தன் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி வேலைக்குச் செல்லும்போது ஆரம்பாக்கம் அருகில் நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து எளாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அன்று இரவு 10.25 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (அக்.9) அதிகாலை 4.15 மணியளவில் மூளைச்சாவு அடைந்தார்.