திருச்சி மாநகரில் ஊர்காவல்படையை சேர்ந்த காவலர்கள் முக்கிய நபர்கள் வருகையின் போது பாதுகாப்பு, போக்குவரத்தை சீர்செய்தல், இரவு ரோந்து போது காவலர்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகரில் ஊர்காவல்படையை வலுபடுத்தும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. 23 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
திருச்சி மாநகர ஊர் காவல் படையில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு இதற்காக திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர ஊர்காவல்படையில் சேர விரும்பும் தகுதியுடைய நபர்களுக்கு இன்று (நவ-12) காலை நேர்முகத்தேர்வு நடைபெற்றது. 28 காலிப்பணியிடங்களுக்கு 94 ஆண்களும், 19 பெண்கள் என மொத்தம் 113 பேர் கலந்து கொண்டனர். இந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு எடை, உயரம், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
இதையும் படிங்க:மழைநீரில் மூழ்கிய வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதை ... போக்குவரத்து துண்டிப்பு