தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-பாஸ் முறையை அமல்படுத்தி பயணிகளை அனுமதிக்க வலியுறுத்தி போராட்டம்

திண்டுக்கல்: சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி மீண்டும் இ-பாஸ் முறையை அமல்படுத்தி பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கொடைக்கானலில் சிறு வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

By

Published : Apr 19, 2021, 6:11 PM IST

கொடைக்கானலில் சிறுவியாபாரிகள் போராட்டம்
கொடைக்கானலில் சிறுவியாபாரிகள் போராட்டம்

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிக்க தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின்போது சிறு வியாபாரிகள் பேசியதாவது, “சென்ற வருடம் கரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிக்க விதிக்கப்பட்ட தடையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தற்போதுதான் சிறு வியாபாரிகள் மெள்ள மெள்ள மீண்டுவந்தனர். இந்நிலையில் மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா தொழிலையே ஆதாரமாகக் கொண்டோர் பெரிதும் பாதிப்படைவர். பஞ்சம் பிழைப்பதற்காக வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மீண்டும் இ-பாஸ் முறையை அமல்படுத்தி கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க: கரோனா: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க சிவசேனா வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details