தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கனமழை வரும் வரை மழைநீர் வடிகால் பணிகளைத்தொடரலாம் - மாநகராட்சி ஒப்புதல்!

சென்னையில் கனமழை வரும் வரை மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

Rainwater
Rainwater

By

Published : Oct 21, 2022, 5:42 PM IST

சென்னை:சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், 1033.15 கிலோ மீட்டருக்கு 4,070 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு பிரிவுகளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என்ற நோக்கில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதில் முதல் பிரிவின்கீழ் 97 விழுக்காடு பணிகளும், 2ஆவது பிரிவின்கீழ் 94 விழுக்காடுப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. வெள்ளத்தடுப்பு பணிகளைப்பொறுத்தவரை மொத்தமுள்ள 76.521 கிலோ மீட்டர் தொலைவில் 62 கிலோ மீட்டர் அளவுக்கு முடிவுற்றுள்ளது.

மொத்தமாக சுமார் 82 விழுக்காடுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க நேற்று(அக்.20) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் கனமழை வரும் வரை வடிகால் பணிகளைத் தொடர ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க: கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details