வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்.4) தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.4) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஏழு மாவட்டங்களில் கனமழை
அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்.4) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகக் கன மழையும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அக்டோபர் 6:கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக்.6) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அக்டோபர் 7: வட மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.