தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் குறைதீர் கூட்டம்

சென்னை: குடிநீர் வாரியத்தின் சார்பில் குறைதீர் கூட்டம் நாளை முதல் 15 பகுதி அலுவலகங்களில் நடத்தப்படும் என அப்பகுதி மக்களிடம் குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

chennai metro water board
chennai metro water board

By

Published : Dec 13, 2019, 10:12 PM IST

சென்னை குடிநீர் வாரியத்தால் குறைதீர்க்கும் கூட்டம் நாளை முதல் குடிநீர் வாரியம் அமைந்துள்ள அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுகிறது. குறிப்பாக திருவெற்றியூர், மணலி, தேனாம்பேட்டை, திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை, மாதவரம், ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கவுள்ளது.

ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், தங்களின் குறைகளான குடிநீர், கழிநீர் சம்மந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்கள் தொடர்பான கோரிக்கைகளை கேட்டறியலாம்.

புதிய குடிநீர் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள் பெறுவது தொடர்பான கோரிக்கைகளை தவிர்க்க வேண்டும். குடிநீர் வாரியத்தால் நிர்வாகிக்கப்படும் அனைத்து தரப்பு பிரச்னைகளையும் தீர்க்க பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து தீர்வு காண முடியும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை சரியாக பயனடுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுளது.

இதையும் படிங்க: சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் தோல் வங்கி! - ஒரு சிறப்புப் பார்வை!

ABOUT THE AUTHOR

...view details