தமிழ்நாடு

tamil nadu

10,12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்

பாடத்திட்டம் நடத்தி முடிப்பதைப் பொறுத்து பொதுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 9, 2021, 7:05 AM IST

Published : Dec 9, 2021, 7:05 AM IST

10,12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்
10,12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை:கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பகச் செம்மல் கணபதி அரசுப் பள்ளியில் , அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 174 மாணவர்களுக்கு மலபார் கோல்டு நிறுவனத்தின் மூலம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உதவித் தொகை வழங்கினார். அப்போது பேசிய அவர் ’முதலமைச்சர் கருணாநிதி ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் 100 மெழுகுவர்த்தியை ஏற்றி விடலாம் என்று கூறுவார். அதுபோல் ஒரு பெண் குழந்தையை படிக்க வைத்துவிட்டால் அந்த குடும்பத்தையே படிக்க வைத்து விடலாம்’,என்றார்.

வெற்றிக்கு பெண்கள்

மேலும்,’ பெண்களின் கல்வி மறுக்கப்படுவதால் 30 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. சமுதாயம் வெற்றிகரமாக முன்னேறுவதற்கு பெண்கள்தான் காரணம். தமிழகத்தில் 70 சதவீத பெண்கள், எழுத்தறிவோடு நடைபோடுவதற்கு காரணம் நம் முன்னோர்கள். பெண்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என கூறியவர் தந்தை பெரியார் . கிராமப்புறங்களில் பெண்களை படிக்க வைப்பதற்குப் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது’.

பாலியல் அத்துமீறல்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , "பாலியல் அத்துமீறல்கள் குறித்து மாணவிகள் துணிந்து புகார் அளிக்க முன்வர வேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ,பாலியல் குற்றச்சாட்டுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். பள்ளிகளில் கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட உடல் ரீதியான பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு தற்போது மருத்துவர்கள் இருக்கின்றனர். நடமாடும் மருத்துவக்குழுவினரைப் பயன்படுத்தி, உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.

விழிப்புணர்வு:

மேலும்,’பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நல்ல ஆசிரியர் கூட பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும் இந்த விசாரணையை இணை இயக்குனர் நிலையில் விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் புகார் பலகைகள் மற்றும் வகுப்பறைகளில் 14417 மற்றும் 1098 எண் கொண்ட பதாகைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நான் சென்ற பள்ளிகளில் இந்த எண்கள் எழுதப்பட்டு இருப்பதை காணவில்லை. எனவே போஸ்டர்கள் அச்சிட்டு வரும் வரையில் பள்ளியில் எழுதி வைக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் மோதலை எப்படி கையாள வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துக்கொண்டார்.

கால அட்டவணைப்படி தேர்வுகள்

ஆசிரியர்கள் மாணவர்களை தாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். மிருகத்தனமாக தாக்குதல் நடத்தும் ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும். ஜனவரி மாதத்தில் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும்.பாடத்திட்டம் மற்றும் கரோனா பாதிப்பு குறித்து முடிவு செய்து பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

பொதுத்தேர்வு, கட்டாயம்

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும், மாணவர்கள் பொதுத் தேர்வுக்குத் தயாராக வேண்டும்.புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவோம். பேருந்துகளில் தொங்கிக்கொண்டுப் பயணம் செய்வதைத் தவிர்க்க ஆசிரியர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டிற்குத் தனிக் கல்விக் கொள்கை:

மேலும், பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்து சேவை இயக்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் . பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு 2077 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பெற்றோர்கள்-ஆசிரியர்கள் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்நாட்டிற்கு தனிக்கல்விக் கொள்கை உருவாக்குவது குறித்து உயர்மட்டக்குழு அமைப்பதற்கான கருத்துக்கள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சீரமைக்கப்பட்ட பெரியார் பேருந்து நிலையம்: ஸ்டாலின் திறந்துவைப்பு

ABOUT THE AUTHOR

...view details