தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிமராமத்து பணி எனக் கூறி மணல் கொள்ளை - பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை: குன்றத்தூர் அருகே குடிமராமத்து பணி என்ற பெயரில் பல லட்சம் மதிப்பிலான மண்ணை கொள்ளை அடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடிமராமத்து பணி எனக் கூறி மணல் கொள்ளை - பொதுமக்கள் குற்றச்சாட்டு

By

Published : Sep 13, 2019, 7:22 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகளத்தூர் ஊராட்சியில் கருமாரியம்மன் குளம் உள்ளது. இங்கு தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

15 லட்சம் ரூபாய் மதிப்பில் குளத்தை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தும் குடிமராத்து பணி டெண்டர் எடுத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குளத்தில் எடுக்கப்படும் சவுடு மண்ணை குடிமராமத்து பணிகளை மேற்கொள்பவர்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குடிமராமத்து பணி என்ற பெயரில் இரவு, பகலாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும், மண் திருடுவதற்காக குளத்தில் 15 அடி ஆழம் வரை பள்ளம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து குளத்தின் அருகில் குடியிருப்புப் பகுதி இருப்பதால் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும்,மழைக் காலங்களில் குளம் நிரம்பினால் உயிர் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குடிமராமத்து பணி எனக் கூறி மணல் கொள்ளை - பொதுமக்கள் குற்றச்சாட்டு

இது குறித்து புகார் அளித்தும், எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று கூறிய அப்பகுதி மக்கள், திருடிய மண்ணை விற்பனை செய்தது போக பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்துள்ளனர். மேலும், பதுக்கி வைக்கப்பட்டுள்ள மணலை மீண்டும் குளத்தில் கொண்டு வந்து கொட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details