தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 4, 2022, 8:52 PM IST

ETV Bharat / state

குரோம்பேட்டையில் தேங்கிய கழிவு நீரில் சமூக ஆர்வலர்கள் படுத்துப்போராட்டம்

குரோம்பேட்டையில் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றாத தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து சாலையில் தேங்கிய கழிவு நீரில் சமூக ஆர்வலர்கள் படுத்துப்போராட்டம் நடத்தினர்.

சாலையில் தேங்கிய கழிவு நீரை அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
சாலையில் தேங்கிய கழிவு நீரை அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்

சென்னை: சென்னை அடுத்த குரோம்பேட்டை புதுவை நகர் 2ஆவது தெருவில், கனமழை காரணமாக சாலையில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி அருகில் உள்ள கடைகளிலும், குடியிருப்புகளிலும் புகுந்துவிடுவதால் கழிவு நீரை அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் சாலையில் அமர்ந்தும், படுத்தும் தாம்பரம் மாநகராட்சி அலுவலர்களைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழைநீருடன் கழிவுநீர் கலப்பதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் நோய்த்தொற்றுப்பரவும் அபாயம் உள்ளதாகவும், இந்தப் பிரச்னை ஆண்டுதோறும் மழைக்காலத்தில் ஏற்படுவதாகவும் நகராட்சி, மாநகராட்சியாக மாறியபோதிலும் இந்தப்பிரச்னைக்குத் தீர்வு பெரும் முட்டுக்கட்டையாகவே உள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், இச்சாலை சுமார் 3 அடி பள்ளமாக உள்ளதால், இதனை ஜி.எஸ்.டி சாலை அளவிற்கு உயர்த்தி இருபுறங்களிலும் கால்வாய்கள் அமைத்தால் மட்டுமே இதற்குத் தீர்வு என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண வழிவகை செய்யப்படும் என உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.

சாலையில் தேங்கிய கழிவு நீரை அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details