அண்ணாநகர் 4ஆவது அவென்யூ பகுதியில், மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக அண்ணா நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின் அடிப்படையில் நேற்று (ஜூலை.31) மாலை அப்பகுதியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு அங்கிருந்த நான்கு பெண்களை மீட்டு மைலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். தற்போது மசாஜ் கடையின் உரிமையாளரரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.