தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: இளைஞர் கைது

சென்னை: அம்பத்தூர் மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து பெண்களை காவல் துறையினர் மீட்டனர். மேலும், இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர்.

prostitution at massage center youth arrest in ambattur
prostitution at massage center youth arrest in ambattur

By

Published : Aug 30, 2020, 2:56 PM IST

சென்னை, வண்ணாரப்பேட்டை, வ.உ.சி நகரை சேர்ந்த சதீஷ் (28) என்பவர் அம்பத்தூர், வடிவேல் முதலி தெருவில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.

இங்கு, இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. . இதனையடுத்து, காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் தலைமையில் மசாஜ் சென்டரிஸ் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடைபெற்று வந்தது உறுதி செய்யப்பட்டது.

பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய ஐந்து பெண்களை காவல்துறையினர் மீட்டு மயிலாப்பூர் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சதீஷை காவல்துறையினர் கைது செய்து, அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details