சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க குடியசுத் தலைவர்(President) ஒப்புதல் அளித்துள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவரை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் (The Supreme Court Collegium) குழு செப்டம்பர் 16ஆம் தேதி பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை குறித்த தகவலை நவம்பர் 9ஆம் தேதி பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
Sanjib banerjee:நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவிற்கு மாற்ற குடியரசுத்தலைவர் ஒப்புதல்
20:44 November 15
இடமாற்றத்திற்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு
கொலீஜியத்தின் பரிந்துரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவரது இடமாற்றத்திற்கு வழக்கறிஞர் சமூகத்தினர் பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதை திரும்பப்பெற வேண்டுமென கோரிக்கைகளை கொலீஜியத்திற்கு (The Supreme Court Collegium) அனுப்பியவண்ணம் இருந்தனர்.
வலுத்த கோரிக்கைகள்
237 வழக்கறிஞர்கள் கோரிக்கை, 31 மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை, மெட்ராஸ் பார் அசோசியேஷன் தீர்மானம், வழக்கறிஞர் அமைதிப் போராட்டம் என ஒவ்வொரு கட்டமாக கோரிக்கைகள் தொடர்ந்தன.
இந்நிலையில் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சக கூடுதல் செயலாளர் ராஜீந்தர் காஷ்யப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செல்லப்பிராணியை நினைத்து கண்கலங்கிய சஞ்ஜிப் பானர்ஜி!