தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 11, 2021, 11:00 PM IST

Updated : May 12, 2021, 5:08 PM IST

ETV Bharat / state

சபாநாயகரின் அதிகாரங்கள் என்னென்ன?

சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களின் கருத்துக்களை, அவைக்குறிப்பில் சேர்க்கவும் நீக்கவும் சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தற்காலிகமாகவோ அல்லது கூட்டத்தொடர் முழுவதற்குமோ தடைவிதிக்கவும் சபாநாயகருக்கு முழு அதிகாரம் உண்டு.

சபாநாயகரின் அதிகாரங்கள் என்னென்ன?
சபாநாயகரின் அதிகாரங்கள் என்னென்ன?

சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று (மே.11) தொடங்கி நடைபெற்று வரும் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இன்று (மே.12) சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்ட அப்பாவு, கு.பிச்சாண்டியை சட்டப்பேரவை துணைத் தலைவராக அறிவித்ததோடு, அவையையும் வழிநடத்தத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சபாநாயகரின் அதிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சபாநாயகரின் அதிகாரங்கள் என்னென்ன?
  • பொதுவாக சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து ஒருவர் சட்டப் பேரவைத் தலைவர் அதாவது சபாநாயகராக தேர்வு செய்யப்படுகிறார்.
  • சட்டப்பேரவை கூட்டங்களுக்கு இவரே தலைமைப் பொறுப்பேற்று வழி நடத்திச் செல்வார். சட்டப்பேரவை வளாக அலுவலகம் முழுவதும் இவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
  • சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களின் கருத்துக்களை, அவைக்குறிப்பில் சேர்க்கவும் நீக்கவும் சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தற்காலிகமாகவோ அல்லது கூட்டத்தொடர் முழுவதற்குமோ தடைவிதிக்க சபாநாயகருக்கு முழு அதிகாரம் உண்டு.
  • சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் எவரேனும் செயல்பட்டால் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகருக்கு உரிமை உள்ளது.
  • சட்டப்பேரவை நடவடிக்கைகளை பொறுத்தவரை சபாநாயகரின் முடிவே இறுதியானது. அதில் நீதிமன்றமும் தலையிட முடியாது.
சபாநாயகரின் அதிகாரங்கள் என்னென்ன?
  • தற்போது ஆட்சிக்கட்டிலில் வீற்றிருக்கும் கட்சியைச் சார்ந்தவராக சபாநாயகர் இருந்தாலும் கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் அவர் பங்கெடுக்கக்கூடாது. இதனை அவர் தனது பதவிக் காலம் முழுமைக்கும் கடைபிடிக்க வேண்டும்.
  • சட்டப்பேரவையைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் இந்தியாவில் எங்கு கைது செய்யப்பட்டாலும், அந்தத் தகவல் பேரவைத் தலைவருக்கு முழு விவரங்களுடன் தெரிவிக்கப்பட வேண்டும். சட்டப்பேரவையின் அமைப்பு எல்லைக்குள், பேரவைத் தலைவரின் உத்தரவின்றி யாரையும் காவல் துறையினர் கைது செய்ய முடியாது.
  • சட்டப்பேரவை உறுப்பினர்கள் எவரேனும் தங்களது பதவியை ராஜினாமா செய்தாலும் அல்லது உயிரிழந்தாலுமோ அத்தகவலை சபாநாயகரே தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பார்.
  • தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் சபாநாயகர் சிவசண்முகம் பிள்ளை ஆவார். இவர் 1952ஆம் ஆண்டு முதல் 1955ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து முறையே கோபாலமேனன், யூ.கிருஷ்ணாராவ் என பலரும் இந்தப் பதவியை அலங்கரித்தனர். இவர்களில் 1985ஆம் ஆண்டு முதல் 1989 வரை சபாநாயகராக பதவி வகித்த பி.ஹெச்.பாண்டியன் தனது அதிகாரங்களை நிலைநாட்டி கவனம் ஈர்த்து பெருமளவு விமர்சனங்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : May 12, 2021, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details